
ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம்
தங்கத்தின் விலை இன்று (மார்ச்.31) ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்துள்ளது. இன்று காலை தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,425-க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.67,400-க்கும் விற்பனையானது. இந்நிலையில், மாலையில் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ரூ.8,450-க்கும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.67,600-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை, ரூ.720 உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.