நாகை பெருமாள் கோவில் வீதி அருகே பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை காண சென்ற தவெக நிர்வாகி ராஜா, பட்டாசு வெடித்த சிறுவர்களை அடித்தது நியாயமா? என சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மறுதரப்பைச் சேர்ந்த ஜெயக்குமார், கோணி ஊசியால் ராஜாவை குத்திவிட்டு தப்பினார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ஜெயக்குமாரை கைது செய்தனர்.