கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து, முருகன் என்ற சகோதரர்களிடையே கடந்த சில மாதங்களாக தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் தீபாவளி கொண்டாட தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்ற மாரிமுத்துவை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட முருகன், தான் வைத்திருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக வெட்டியதில் இருவரும் உயிரிழந்தனர். தற்போது தலைமறைவான முருகன் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சினியை போலீசார் தேடிவருகின்றனர்.