திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு, சுமார் 20க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்தியுள்ளனர். அப்போது, அங்கிருந்த தமிழ்நாடு இளைஞர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.