முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் பாதங்களுக்கு கொடுப்பதில்லை. ஆனால் பாதங்களை பாதுகாக்க வேண்டியது மிக அவசியம். ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கால்கள் இரண்டையும் அரை மணி நேரம் ஊற விடவும். அழுக்குகள் வெளியேறத் துவங்கும். பின்னர் காலை சோப்பு போட்டு கழுவி, தேங்காய் எண்ணெய் தடவி இரவு விட்டுவிடவும். இதனால் பாத வெடிப்பு, நகங்களில் அழுக்கு சேர்வது போன்றவை தவிர்க்கப்படும்.