தென்காசி: பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய மழை

69பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. குற்றாலம் மலைப்பகுதியில் கனமழை நீடித்தது. இன்று காலையில் வெயிலின் தாக்கம் மிகுதியாக இருந்தது.

ஆனால் மாலையில் தென்காசி பகுதியில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தென்காசி பகுதியில் பெய்த கனமழையால் நிலத்தடி நீர் அதிகரித்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தக் கனமழை தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி