காரைக்குடி - Karaikudi

சிவகங்கை: புதிய மதுபானகடை திறப்பதற்கு எதிர்ப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா பொன்னளிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட செட்டியேந்தல் கிராமத்தில் புதிய மதுபான கடை திறப்பதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த கடையை திறப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முயற்சித்து வருவதாகவும் பல கட்ட போராட்டம், பேச்சுவார்த்தை, நீதிமன்றத்தில் வழக்கு என கடை வருவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் போலியான உத்தரவுகளை பிறப்பித்து கடையை திறக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இன்று (நவம்பர் 15) புதியதாக திறக்கப்பட உள்ள கடை முன்பாக அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  புலியடித்தம்பம் அருகில் உள்ள மதுபான கடையை செட்டியேந்தல் கிராமத்தில் வயல்வெளிக்கு அருகில் திறக்க புதிய கட்டிடம் கட்டப்பட்டு டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் சாலை, குடிநீர் எதுவுமே இல்லாத நிலையில் அதனை நிறைவேற்றி தராத நிலையில் மதுபான கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வீடியோஸ்


சிவகங்கை