சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சிவன் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முங்க தெய்வானைக்கு திருகல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் திருமணம் நடைபெற வேண்டி ஆண்கள் பெண்கள் மாலை வாங்கி கொடுத்து வேண்டிக்கொண்டு மாலையை திரும்பி பெற்று சென்றனர். அதைத்தொடர்ந்து சுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.