உத்தரகாண்ட் டேராடூன் அருகே சுமார் 100 கி.மீ., வேகத்தில் சென்ற இன்னோவா கார் ஒன்று லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். லாரியில் மோதிய வேகத்தில் காரின் மேற்கூரை பெயர்ந்ததால், இருவரது தலை துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.