சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் காதி வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுவிற்கான
பயிற்சியை தொடங்கி வைத்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இவ்வாறு கூறினார்.
ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சதவிகித கடனை வங்கிகள் வழங்க வேண்டும் என்றும், வங்கிகள் அதனை மறுக்க முடியாது என்றும் கூறிய ப. சிதம்பரம் உதாரணமாக
விவசாயத்திற்கு 18 சதவீத கடன் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மகளிர் சுய உதவிக் குழுவினர், மற்றும்
தொழில் முனைவோர்கள் அரசை மட்டுமே நம்பி இல்லாமல் தங்களது முயற்சியில்,
நம்பிக்கையுடன் வங்கிகளில் கடன் பெற்று, தொழிலிலும் வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்