அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திரையரங்கு ஒன்றில் தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படம் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதி போல் சித்தரித்த காட்சி இடம்பெற்றுள்ளதாக கூறி இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக திரையரங்கு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள எஸ் டி பி ஐ கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
திரையரங்கை முற்றுகை இட முயன்ற பொழுது 20க்கும் மேற்பட்ட எஸ் டி பி ஐ கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் திரையரங்கு அமைந்திருக்கும் காரைக்குடி செக்காலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி