செவரகோட்டை தடுப்பணையில் ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர்

74பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள செவரகோட்டை கிராமத்தின் மேற்குப் பகுதி மணிமுத்தாற்றில் விவசாயிகளின் தேவைக்காக கடந்த 2013 ஆம் ஆண்டு தடுப்பு அணை கட்டப்பட்டது தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஓரியூர் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வதால் மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் மணிமுத்தாறில் பெருக்கெடுத்து ஓடிவரும் மழை நீர் செவரகோட்டை தடுப்பணையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது தற்போது தடுப்பணையிலிருந்து விவசாய தேவைக்காக கால்வாய் பகுதியிலும் ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது தடுப்பணை ஷட்டரில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வெளியே வருகிறது இதனால் தற்பொழுது தீபாவளி தொடர் விடுமுறை உள்ள நிலையில் சூரக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 100 க்கும் மேற்பட்டோர் குடும்பம் குடும்பமாக வருகை தந்து ஷட்டரியில் இருந்து வெளியேறும் தண்ணீரில் சிறுவர்கள் சறுக்கி விளையாடியும் பெண்கள் குழந்தைகளுடன் வருகை தந்து குளித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் தற்போது இந்தப் பகுதி திடீர் சுற்றுலாத்தலமாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி