மீன் விற்பனை நிலையத்தில் மூன்று ஆண்டு நிறைவு விழா

67பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வாட்டர் டேங்க் சாலையில் மாநகராட்சி நவீன மீன் விற்பனை நிலையத்தில் உள்ள இரண்டு கடைகளில் மூன்றாவது ஆண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு அங்கு விற்கப்படும் மீன் நண்டு இறால் உள்ளிட்ட எந்த இறைச்சியை ஒரு கிலோ வாங்கினாலும் முதலில் வரும் நூறு பேருக்கு பிளாஸ்டிக் வாலி இலவசம் என அறிவித்திருந்தனர். இதனால் பெண்கள் ஆண்கள் என அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை வாங்கி செல்கின்றனர். நண்டு 250 ரூபாய்கும், விரால் 250 ரூபாய்கும், விலைமீன் 250 ரூபாய்கும், நகரை 250ரூபாய்கும், பாறை 250 ரூபாய்கும், இறால் 300 ரூபாய்கும், கருநகரை மற்றும் சங்கரா மீன் 100 ரூபாய் என குறைந்த விலையில் மீன்கள் இறால் நண்டு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து கடைக்காரர் கூறும் போது சுற்றுவட்டார பகுதிகளில் விற்கப்படும் மீன் நண்டு இறால் உள்ளிட்டவைகள் விலை அதிகமாக இருப்பதாகவும் ஆனால் மாநகராட்சி நவீன மீன் அங்காடியில் 100 முதல் ரூ 250 க்கு வழங்கப்படுவது மக்களுக்கு தெரிவதில்லை எனவும் எனவே தெரிய படுத்துவதற்காக இது போன்ற அறிவிப்பை வெளியிட்டதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் 2, 3 கிலோ மீன்களை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி