கருவேல மரங்களை கல்லல் ஊராட்சி ஒன்றிய மூலமாக பொதுஏலம் விட மனு

74பார்த்தது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, கல்லல் ஊராட்சி ஒன்றியம், கல்லுப்பட்டி பஞ்சாயத்தில் சிறுகடம்பன் கண்மாய் குருமுத்தங்குடி கண்மாய் மானகிரி திடல் ஆகிய இடங்களில் அதிகளவில் கருவேல மரங்களை பெரிய மரங்களாக உள்ளதாகவும் மழை பெய்தாலும் கண்மாய்களுக்கு நீர்வரத்து பாதிக்கப்படுகின்றது கண்மாய்களில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் மிகவும் சிரமப்படுவதாவும் கல்லுப்பட்டி ஊராட்சியில் மக்கள் அடிப்படை தேவைக்காக ஊராட்சி மன்றத்தை அனுகினால் ஊராட்சி பொது நிதியில் பணம் இல்லை என்று சொல்கிறார்கள் சிறகடம்பன் கண்மாய் மற்றும் மானகிரி திடல் ஆகிய இடங்களில் உள்ள கருவேல மரங்களை கல்லல் ஊராட்சி ஒன்றிய மூலமாக பொது ஏலம் விட்டு, அந்த பணத்தை கல்லுப்பட்டி ஊராட்சி பொது நிதியில் சேர்த்து விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதார மற்றும் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமென இன்று மதியம் சுமார் 3: 30 மணியளவில் ஆட்சியர் ஆஷா அஜித்திடம் கொடுத்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி