சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், மறவமங்களம் உள்வட்டம், மறவமங்களம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பிஆர். செந்தில்நாதன் அவர்கள் முன்னிலையில் பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை, வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், 06 பயனாளிகளுக்கு தலா ரூ. 21, 000/- வீதம் மொத்தம் ரூ. 1, 26, 000/- மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 26 பயனாளிகளுக்கு ரூ. 3, 25, 250/- மதிப்பீட்டிலான மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவைகளுக்கான ஆணைகளையும், 06 பயனாளிகளுக்கு வாரிசு சான்று, விதவைச் சான்று, ஆண் குழந்தை இல்லை சான்று, சிறு குறு விவசாயி சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று போன்ற வருவாய்த்துறை சான்றுகளையும், 07 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் முழுப்புலத்திற்கான ஆணைகளையும், 12 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உட்பிரிவிற்கான ஆணைகளையும், 17 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகளையும் வழங்கினர்.