சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்:
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தால் நாங்கள் நிச்சயம் அதனை தோற்கடிப்போம் என்றவர்,
திமுக கூட்டணி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வலிமையாக உள்ளது எனவும்,
எங்கள் கூட்டணியை யாரும் உடைக்கவும் முடியாது கலைக்கவும் முடியாது என்று உறுதிப்பட தெரிவித்தார்.
அடுத்த தேர்தலிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் வேண்டாம் என்ற ப. சிதம்பரம்,
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை கொடுப்பதற்கு பாரதிய ஜனதாவிற்கு விருப்பம் இல்லாததால்தான் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர் என்றும் கூறினார்.