சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தாளிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பூச்சி இருளப்பன் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 7 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது இந்நிலையில் தேவகோட்டை தாலுகா ஆறாவயல் பகுதியில் கடந்த ஆண்டு அரசு பேருந்தை சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை இன்று அவரை பிடிக்க முயன்ற போது அவர் காவலர்களைக் கண்டதும் தப்பி ஓடியதில் கீழே தவறி விழுந்து காலில் பலத்த முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் காவலர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர் அவருக்கு இன்று இரவு சுமார் 9 மணியளவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறை அதிரடியாக கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.