அரபு நாட்டு முதலாளிக்கு குதிரை வண்டியில் உற்சாக வரவேற்பு

57பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் சவுதி அரேபியா தமாம் அருகே உள்ள அல் கசா என்ற ஊரில் அபூ வாஹித் என்ற முதலாளியிடம் வணிக நிறுவனத்தில் சுமார் 32 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவரது மகள் அனீஸ் பாத்திமா விற்கும், காரைக்குடியைச் சேர்ந்த சபீர் அகமதுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று காரைக்குடி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஷாகுல் ஹமீது மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக முதலாளி அபு வாஹித், மற்றும் அவரது உறவினர்களான, ஹம்சா, அப்துல் ரகுமான் ஆகியோர் சவுதி அரேபியா நாட்டிலிருந்து வந்திருந்தனர். சாகுல் அமீது தனது முதலாளி மற்றும் அவரது உறவினர்கள்
திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு இரண்டு குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் ஊர்வலமாக மேல தாலங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து முதலாளியை மகிழ்ச்சி படுத்தினார் தொடர்ந்து. மண்டபத்திற்கு வருகை தந்த அரபு முதலாளி மற்றும் அரபு நாட்டுச் சேர்ந்தவர்களுக்கு தமிழ் கலாச்சாரப்படி பெண்கள் ஆரத்தி எடுத்ததை ரசித்தனர்
பூரிப்படைந்த முதலாளின் உறவினர் அப்துல் ரகுமான் என்ற அரபி, குதிரை வண்டியிலே நடனம் ஆடியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதன் பின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி