தற்காலிக ஆசிரியர்களுக்கு டிச.31ம் தேதி வரை ஊதியம் வழங்க அனுமதி

85பார்த்தது
தற்காலிக ஆசிரியர்களுக்கு டிச.31ம் தேதி வரை ஊதியம் வழங்க அனுமதி
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளுக்கு 1 :40 என்ற ஆசிரியர், மாணவர் விகிதப்படி 7,979 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டன. அதன்படி, பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிச.31 ஆம் தேதி வரை ஊதியம் வழங்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது நிறைவேறியுள்ளது.

தொடர்புடைய செய்தி