தமிழக அரசின் "கனவு ஆசிரியர்" திட்டத்தின் கீழ் 54 ஆசிரியப் பெருமக்களை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். அந்நாட்டின் கல்வி நிறுவனங்களையும், பண்பாட்டு அடையாளங்களையும் பார்வையிட்ட ஆசிரியப் பெருமக்கள் தமிழ்நாட்டிற்கு புறப்பட்டுள்ளார்கள். மேலும், மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்து விட்டதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அதற்கு, “இது எங்களின் கடமை” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.