சேலம்: வாழப்பாடி ராமமூர்த்தி, வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சிலை

58பார்த்தது
சேலம்: வாழப்பாடி ராமமூர்த்தி, வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சிலை
சமூக நீதி சத்திரியர் பேரவை சார்பில் சேலம் சங்கர்நகர் வன்னியர் குல சத்திரியர் மண்டபத்தில் வாழப்பாடி ராமமூர்த்தி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கு புகழ் அஞ்சலிக்கூட்டம் நேற்று(அக்.26) நடந்தது. வாழப்பாடியார் அறக்கட்டளை ராம. சுகந்தன் தலைமை தாங்கினார். தலைமை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார். வன்னியர் பொதுச்சொத்து நலவாரியத்தின் தலைவர் ஜெயராமன், நலவாரிய முன்னாள் தலைவர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வாழப்பாடி ராமமூர்த்தி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் செய்த சாதனைகள் பற்றியும், வன்னியர் சமூதாயத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிய நற்பணிகள் குறித்தும் பலர் பேசினர்.

கூட்டத்தில், சேலம் விமான நிலையத்திற்கு வாழப்பாடி ராமமூர்த்தி பெயரும், சேலம் அரசு சட்டக்கல்லூரிக்கு வீரபாண்டி ஆறுமுகம் பெயரும் சூட்ட வேண்டும். அவர்கள் இருவருக்கும் சேலத்தில் சிலை வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி