ஓமலூர் - Omalur

காடையாம்பட்டியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்

காடையாம்பட்டியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் அருகே மக்கள் சந்திப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி வரவேற்றார். சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். தொடர்ந்து 60 பயனாளிகளுக்கு ரூ. 34.96 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கி பேசினார். அப்போது அமைச்சர் பேசியதாவது: - காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் 33,259 பேர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். மேலும் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 7,000 பேர் முதியோர் உதவித்தொகை பெற்று வருகின்றனர். கடந்த 3½ ஆண்டுகளில் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 122.70 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 62 பயனாளிகள் பயனடையும் வகையில் ரூ. 1.92 கோடி மதிப்பிலான பணிகளும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ. 12.74 கோடி மதிப்பிலான சாலை பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரூ. 1.74 கோடி மதிப்பிலான அடிப்படை வசதிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ. 21.10 கோடி மதிப்பிலான பணிகள் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் ப

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా