
ஓமலூரில் பூட்டை உடைத்து டிரைவர் வீட்டில் திருடிய 2 பேர் கைது
ஓமலூரை அடுத்த தாத்தியம்பட்டி 2-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 62), தனியார் பள்ளியில் டிரைவராக உள்ளார். இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 1 லட்சம், 5 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை திருடி சென்றனர். வீடு திரும்பிய பழனிசாமி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (32), ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள் (42) ஆகிய 2 பேர் பழனிசாமி வீட்டில் திருடியது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.