தீபாவளி திருநாளை ஒட்டி இன்று கறிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆட்டுச் சந்தையில் 4000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது விற்பனையாளர்களும் வியாபாரிகளும் அதிக அளவில் ஆடுகளை வாங்கிச் சென்றனர் இந்நிலையில் வழக்கமாக தீபாவளி அன்று அம்மாவாசை வரும் இந்த வருடம் தீபாவளிக்கு அடுத்த நாள் அமாவாசை வருவதால் இன்று கறிக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக மாநகரில் பழைய பேருந்து நிலையம், 5 ரோடு, அஸ்தம்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கறிக்கடைகளில் மக்களின் கூட்டம் இயல்பை விட அதிகமாக இருந்தது. இது குறித்து கறிக்கடை வியாபாரி கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று விற்பனை குறைவாக தான் இருக்கும் ஆனால் இந்த ஆண்டு அம்மாவாசை அடுத்த நாள் வருவதால் இன்று ஏராளமான மக்கள் வீடுகளில் அசைவ உணவு சமைப்பதற்காக கறிகளை வாங்கிச் சென்றனர், ஆடு கிலோ ₹200 உயர்ந்து 700 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனையானது. கோழி 180 முதல் 220 ரூபாய் வரை விற்பனையானது. தீபாவளி திருநாளில் கறி தேவை அதிகரித்ததால் விலையும் சற்று உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.