தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு வருகிற நவ., 25ஆம் தேதிக்குள் நடைபெறவுள்ளது. அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கையை ஏற்று பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெறவுள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் இணையவழியில் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.