மேட்டூர் - Mettur

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 93. 40 அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 93. 40 அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6, 416 கன அடியாக உள்ள நிலையில், நீர்மட்டம் 93. 40 அடியாக சரிந்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 7 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 7, 153 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6416 கன அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15, 000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 94. 09 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 93. 40 அடியானது. நீர்இருப்பு 56. 62 டிஎம்சியாக உள்ளது.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా