கெங்கவல்லி - Gangavalli

சேலம்: ஆவின் பால் முகவர்களுக்கு ஊக்கத்தொகை

சேலம் மாவட்டம், ஆத்தூரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களின் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் கதிரவன் பொதுச் செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று சங்கம் தொடர்பான பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களின் சங்க பொதுச் செயலாளர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தங்கம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஊதிய உயர்வு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். பால் உற்பத்தி கொள்முதல் அளவு 50 லட்சம் லிட்டராக அதிகரிக்க அமைச்சர் அறிவுறுத்தி இருப்பதாகவும் இதனை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு பணி செய்ய காத்திருக்கிறோம். ஆனால் அரசு அறிவித்த லிட்டருக்கு மூன்று ரூபாய் நோக்கத்தொகையை உடனடியாக 3 மாதங்களாக நிலுவையில் உள்ள தொகையோடு சேர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా