4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும் சீனாவும் எல்லை பகுதிகளில் ஒன்றாக ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாட்டை தற்போது எட்டியுள்ளன. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நாளை இருதரப்பு சந்திப்பு நடைபெறும்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.