கெங்கவல்லி - Gangavalli

கெங்கவல்லி உணவகத்தில் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூர் பகுதியில் சேர்ந்தவர் தங்கராசு மகன் மாவீரன் (36). இவர் கெங்கவல்லி நான்கு ரோடு சந்திப்பில் கீற்று கொட்டகையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இரவு கடையை அடைத்து விட்டு மீண்டும் காலையில் கடையை திறக்க வந்த போது கீற்று கொட்டகைகள் சேதமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது சிலிண்டர் அடுப்பு, மிக்ஸி, எடை மெஷின் உள்ளிட்ட உணவகத்திற்கு பயன்படும் பொருட்கள் திருட போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாவீரன் கெங்கவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் சிறிய அளவிலான கடைகளை கூட கொள்ளையர்கள் விட்டு வைக்காதது அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా