

ஆத்தூர் புனித ஜெயராக்கினி தேவாலயத்தில் குருத் தோலை ஞாயிறு
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை தேவாலயத்தில் குருத்தோலை மந்தரித்து குருத்தோலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்தவர்களின் தவக்காலமாக கருதப்படும் இறைவன் இயேசு சிலுவையில் அறைந்ததை நினைவுகூறும் வகையில் 40 நாட்கள் விரதம் இருந்து தவக்காலம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை தேவாலயத்தில் காலையில் குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு தென்னை குருத்தோலைகளை கிறிஸ்தவர்கள் கையில் ஏந்தியவாறு ஓசன்னா, ஓசன்னா பாடல் பாடி ஆர்.சி பள்ளியில் இருந்து கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் கிறிஸ்துவ தேவாலயத்தை சென்றடைந்தனர். பின்னர் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பெருமக்கள் குருத்தோலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.