ஆத்தூர் - Aathur

வாழப்பாடி: மும்மொழி கொள்கைக்கு எதிப்பு; மாணவர் அணி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிராக திமுக-அதன் கூட்டணி கட்சிகளின் தமிழக மாணவ இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திமுக சேலம் கிழக்கு மாவட்ட மாணவர் அணி தலைமையில் வாழப்பாடி தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவ அமைப்பினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் முழக்கங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தியவாறு இந்தி மொழியை திணிக்காதே சமஸ்கிருதத்தை திணிக்காதே மும்மொழி ஏற்க மாட்டோம். தேசிய கல்வியை திணிக்காதே என்றும் தமிழ்நாட்டிற்கு உடனடியாக நிதியை விடுவிக்குமாறும் எங்கள் மக்கள் வரிப்பணம் எங்களுக்கே தர வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தபால் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் வரை கண்டன கோஷங்கள் எழுப்பி பேரணியும் நடைபெற்றது.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా