மோடி தமிழகம் வருகை எதிர் ப்பு ஆத்தூர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

69பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரியும், இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, உள்ளிட்டவை களை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாவட்ட தலைவர் 50க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடி ஏந்தியும் கருப்பு பலூன்கள் பறக்க விட்டும் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி