தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் தாக்கும் அதிகரித்து காணப்படுகிறது சேலம் மாவட்டத்தில் சதம் அடித்து காணப்படும் வெயில் தாக்கத்தினால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் அதிகாலையில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
தற்போது இடியுடன் ௯டிய கனமழை
ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரசிங்கபுரம், தென்னங்குடி பாளையம், அம்மம்பாளையம் , பைத்தூர், கொத்தாம்பாடி, மல்லியகரை, காட்டுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நடைபெறுகிறது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆத்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பிடிஆர் சிலை முன்பு சாக்கடை நீருடன் மழை நீர் கடந்து குளம் போல் காட்சியளித்து வருகிறது இதனால் பொதுமக்கள் அவ்வழியாக செல்ல வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.