ஆத்தூர் சூறைக்காற்றில் பறந்த கோவில் தகரசீட் வீடியோ வைரல்

72பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடசென்னிமலையில் ஸ்ரீ பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. நூறாண்டுகள் பழமையான இக்கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைக்கோவில் வெயிலில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் வசதிக்காக தகரத்தால் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பந்தல் முறையாக அமைக்கப்படாததால் அப்பகுதியில் வீசிய சூறைக்காற்றில் திடீரென பந்தலில் இருந்த தகர சீட்டுகள் காற்றில் பறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தகர சீட்டுகள் பறந்ததால் பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினார்கள். தற்போது வீடியோ வைரல்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி