கருமந்துறை மலையில் தரம் இல்லாத தார்சாலை வீடியோ வைரல்

59பார்த்தது
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கருமந்துறை பெரிய கல்ரயன்மலை கீழ்நாடு கிராம பஞ்சாயத்து கரியகோவில் முதல் அத்திரிப்பட்டி 2 கிலோ மீட்டர் தொலைவில் புதியதாக தார் சாலை இரண்டு தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த தார் சாலை இரண்டே நாளில் பெயர்ந்து வருவதாகவும் அங்கு இருக்கும் கிராம மலைவாழ் இளைஞர்கள் அந்த சாலையின் தரத்தைப் பற்றியும் சாலை பெயர்ந்து வருவதை கையால் எடுத்து காண்பிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தரம் இல்லாத சாலையை போட்டிருப்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி