சேலம் மாவட்டம்,
ஆத்தூர் அருகே காட்டுகோட்டை வடசென்னிமலையில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய திருக்கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவிலில் முருகனுக்கு பங்குனி உத்திரம் தைப்பூசம் ஒவ்வொரு மாதத்திலும் வரும் சஷ்டி, கிருத்திகை மற்றும் தினந்தோறும் அபிஷேகம் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திர தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம், அதேபோல் இந்த ஆண்டும் பங்குனி மாதம் 29 ஆம் தேதி ஏப்ரல் 11ந் தேதி அன்று பங்குனி உத்திர திருத்தேர் விழா நடைபெற உள்ள நிலையில் கோவில் வளாகத்தில் நேற்று யாக பூஜை செய்யப்பட்டு மேலும் அங்குள்ள கொடி மரத்திற்கு பூஜை செய்தும் கொடியேற்றத்துடன் திருத்தேர் விழா தொடங்கியது. இதில் காட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.