சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் வடக்கு தில்லை நகர் பகுதியில் புதிதாக கட்டப்ட்ட
ஸ்ரீ பாலமுருகன் ஆலயய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 06 -ஆம் தேதி மஹா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் தட பூஜை கோ பூஜை நவகிரக ஹோமம் கோபுர கலச பிரதிஷ்டை யந்திர பிரதிஷ்டை முகூர்த்தக்கால் நடுதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. பின்னர்புண்ணியஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீருக்கு பூஜை, கோ பூஜை , யாக பூஜை, திரவிய ஹோமம் பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்ற பின்னர் கலசங்களை மேளதாளங்கள் முழங்கவாணவேடிக்கையுடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அங்கு திரண்டு இருந்த பக்தர்களுக்கு புனித நீரை தெளித்தனர் பின்னர் ஸ்ரீ பாலமுருகன் சுவாமிக்கு தீர்த்தக் கலசங்களில் இருந்த புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ பாலமுருகன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகளும் அபிஷேகமும் தீபாரத்தனையும் நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் விழா குழு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.