சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான வீட்டில், சின்ராஜ் மகன் கட்டிட தொழிலாளி
ரமேஷ் வசித்து வருகிறார். தனது குடும்பத்துடன் திருவாரூர் கோயிலுக்கு சென்றுள்ளனர் இந்த நிலையில் வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை அறிந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் வைத்திருந்த 30 ஆயிரம் ரொக்க பணம் ஒரு பவுன் தங்க நகை கொள்ளையடித்தனர், இன்று காலை வீட்டின் கதவு திறந்து இருப்பதைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அதிர்ச்சியடைந்து
வீட்டின் உரிமையாளர் பாபுவுக்கு தகவல் தெரிவிக்கவே உரிமையாளர் பாபு ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். மர்ம கும்ப கும்பல் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கட்டிட கூலி தொழிலாளி வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.