சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த ஏத்தாப்பூரில் அமைந்துள்ள உலகிலேயே மிகவும் உயரமான 146 அடி முத்து மலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் நேற்று இரவு 8 மணி அளவில் தங்க தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் தங்கத் தேரை வடம் பிடித்து கோவிலை சுற்றி வந்தனர்.
முன்னதாக முத்துமலை முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுவாமியை தரிசனம் செய்ய வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் தங்கத் தேரை தரிசனம் செய்து அரோகரா கோசமிட்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.