சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விளம்பர டிஜிட்டல் பேனர் வைக்க நகராட்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். அனுமதியின்றி வைத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த வாரம் ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமால், நகர காவல் ஆய்வாளர் அழகு ராணி தலைமையில்
நடைபெற்ற வணிகர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை கடைபிடிக்காம ல், ஆத்தூர் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்களை வைத்தனர். இந்நிலையில் நேற்று ஆத்தூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட காம ராஜனார் சாலை, ராணிப்பேட்டை, புதுப்பேட்டை, உடையார்பாளையம் மற்றும் உழவர்சந்தை போன்ற பகுதிகளில் நகராட்சி அனுமதியின்றி வைக்கப்பட்ட 20 க்கும்மேற் பட்ட டிஜிட்டல் பேனர்களை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.