சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூரில் முத்துமாலை முருகன் கோவில் உள்ளது. சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள இக்கோவிலில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட பாலை முத்துமலை முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து முத்து மலை முருகன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.