

ஆத்தூர் அதிமுகவை பாஜக விடம் குறைந்த விலைக்கு விற்றதாக பேச்சு
சேலம் கிழக்கு மாவட்டம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இந்தி திமுக இளைஞர் அணி சார்பில் இந்தித் திணிப்பு நிதிப் பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பொதுக் கூட்டத்தில் பேசியபோது எடப்பாடி பழனிச்சாமி கால்களை தேடி பயணிக்கிறார் நேற்றைக்கு சசிகுலாவின் கால் இன்றைக்கு அமித் ஷாவின் கால் அதிமுகவை குறைந்த விலைக்கு பட்ட பகலில் பாரதிய ஜனதாவிடம் விற்று விட்டார் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா திமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் ஒன்று சேர்ந்தால் திமுகவிற்கு இரட்டை வெற்றி நிச்சயம் என்று பேசினார் பாரத பிரதமர் தாய்மொழி குஜராத்தியில் பேசுவதில்லை இந்தியில் மட்டுமே பேசுகிறார். நிர்மலா சீதாராமன் வெங்காய பூண்டு அதிகம் சாப்பிட்டால் சூடு சொரணை வரும் எனவும் திமுக என்னும் ஆகாயத்தின் மீது ஒரு சில்லறை பையல் சீமான் கல்லெறிகிறான் 2026 தேர்தல் முடிவில் சீமான் என்னும் நாம் தமிழர் கட்சி கல்லறையில் அடக்கம் அடக்கம் செய்யப்படும் என பேசினார். இதில் திமுகவினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.