இந்தியாவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு கடந்த ஆண்டில், 48 விழுக்காடு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. Foundit அமைப்பு நடத்திய இந்த ஆய்வில், ஐடி, வங்கி இன்சூரன்ஸ், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநிலங்களில் தலைநகருக்கு அடுத்தபடியாக உள்ள 2ஆவது, 3ஆவது நிலை முக்கிய நகரங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. நடப்பாண்டில் இது மேலும் உயரும் என Foundit அமைப்பு தெரிவித்துள்ளது.