தமிழ்நாட்டில் நடைபெறுவது மன்னராட்சி இல்லை, வின்னராட்சி என்று நாஞ்சில் சம்பத் கூறினார். தவெக தலைவர் விஜய், திமுக மற்றும் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தவெக-வின் தலைவர் விஜயா? பிரசாந்த் கிஷோரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விஜய் இருக்கிறார்” என தெரிவித்தார்.