தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் கொண்டாட்டங்களுக்காக பாடலும் பாடலும், பாட்டுக்கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகள் வைப்பது வழக்கம். இந்நிலையில், கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் இசை கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட அனுமதியில்லை. கோயில் இசை கச்சேரிகள் நடத்தப்படும் போது பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் விழாக்களின்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.