தஞ்சாவூரில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். பத்தாம் வகுப்பு மாணவரான தீரன் பெனடிக்ட் என்பவரிடம் தனது காளையை அடக்கினால் ரூ.200 கொடுக்கிறேன் என அதன் உரிமையாளர் கூறியிருக்கிறார். இதை நம்பி காளையை அடக்க மாணவர் முயன்ற நிலையில் காளை தீரனின் நெஞ்சில் குத்தி கிழித்தது. இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.