வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு ராணுவ தளத்தில் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த மனித வெடிகுண்டு தாக்குதில் சுமார் 30 பேர் காயமடைந்தனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னுவில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிய தலிபான்களுடன் இணைந்த குழு பொறுப்பேற்றுள்ளது. ராணுவம் உடனடியாக எந்த உயிரிழப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் பன்னு மாவட்ட மருத்துவமனை 12 பேர் உயிரிழந்ததாக அறிவித்துள்ளது.