திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தக்காளியின் விளைச்சல் அமோகமாக உள்ளது. இருந்தபோதிலும், தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், வேதனையடைந்த விவசாயிகள், தக்காளியை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு செல்லும் செலவை தவிர்க்க செடியிலேயே பறிக்காமல் விட்டு வருகின்றனர். அதேபோல, திண்டுக்கல் அய்யலூர் தக்காளிச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.4க்கு விற்பனையாவதால், கிலோக் கணக்கில் தக்காளிகளை விவசாயிகள் குப்பைகளில் கொட்டிச் செல்கின்றனர்.