தவக் காலம் தொடக்கம்: தூத்துக்குடி ஆலயங்களில் பிராத்தனை

62பார்த்தது
கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் தவக்காலம் இன்று (மார்ச் 4) சாம்பல் புதனுடன் துவங்கியுள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது. தூத்துக்குடியில் தூய பனிமயமாதா பேராலயம், திரு இருதய பேராலயம், அந்தோனியார் திருத்தலம், யூதேயூ ஆலயம், மிக்கேல் அதிதூதர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி