சேலம் மாவட்டம் ஆத்தூரில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகியவர்கள் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி நேற்று (மார்ச் 4) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இன்றைக்கு தங்கம் ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது. ஏழை பெண்கள் திருமணம் செய்வதற்கு சிரமப்படும் நிலை உள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை திமுக நிறுத்திவிட்டது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.